அழகிற்கோர் இலக்கணம் அவள்
பொறுமையின் சிகரம் அவள்
கவி பாடும் புலவர்-அவளைப்
புகழ் மேடையில் ஏற்றிடுவர்.
நாம் வியக்கும் அணு ஆயுதம்
அவள் முன்னே சிறு ஆயுதம்.
கடையெழு வள்ளல்கள்- அவள்
கொடை முன்னே தோற்றிடுவர்.
அவளுக்கொரு துணையில்லை
உறவினரும் அருகில் இல்லை.
அவள் வளர்த்த பிள்ளைகள்
பலகோடி பேர் உண்டு.
இருந்தும் என்ன பயன்
அவள் சோகம் யாரறிவார்?
கேட்கவும் யாருமில்லை!!!
கேட்டாலும் யாரும் இல்லை!!!!...
அவள் யார் ?????????
விடு கதைன்னா ஓகே ...
ReplyDeleteபுனைவுன்னாலும் ஓகே ...
அடி மனதிலிருந்து வந்த ஒண்ணுன்னா ....
i m sry bro....
be careful ....
வரேன் சாந்தன் ...
இது விடுகதை மட்டுமே.
ReplyDeleteவிடை தெரிந்தால் சொல்லவும்.
பூமி
ReplyDeleteம்ம்ம் சரியான விடை.
ReplyDelete