Sunday, May 09, 2010

வானம்

நீலம் உன் வண்ணம்
நெடுநீளம் உன் தேகம்
வெண்மை உன் சிரிப்பு
கருமை உன் அழுகை
கண்ணெதிரில் நீயுண்டு
தொட்டுணர யாருமில்லை

மெய்ஞானம் உனை வாழ்த்தும்
விஞ்ஞானம் உனை வாட்டும்-உன்
மேனியில் பட்ட காயம்
அறிஞர் சிலர் செய்த மாயம்

உன் நலமே எம் நலம்
அதை உணரும் காலம் வரும்
அயலவனை எதிரியென
எண்ணிய மனிதனவன்
தனைக் காக்க எண்ணி
தனக்கே எதிரியானன்
என்றுணர்வான் இம்மூடன் -அன்று
பிழைக்கும் மனிதகுலம்........

No comments:

Post a Comment