Tuesday, April 27, 2010

சுதந்திரம்

நாம் பிறந்த பூமி நமக்கில்லை
இனிப் பிறப்போர் வாழ வழியில்லை
உதிரம் கொடுத்துக் காத்தனர் மறவர்
உதிரம் காக்க விற்றனர் சிறியர்
விலைமகள் கொடுத்தாள் தன் மேனி பிறர்க்கு
விலைமகன் கொடுத்தான் தன் பூமி பிறர்க்கு
புகையில்லை மதுவில்லை வீரமறவர் ஆண்ட போது
இரண்டும் வந்தது விலைமகளுடன் கொடியவர் ஆளும்போது
காலம் மாறும் காட்சிகள் மாறும்
வீழ்ந்தவர் எழுவர் புதுமுகம் காட்டுவர்
கயவர் ஓடுவர் புறந்தனைக் கட்டுவர்
விண்ணும் மண்ணும் வியக்கும் அன்று
நம் தமிழன் கொண்ட நெஞ்சுறுதி கண்டு
கனவுச் சுதந்திரம் கைகளில் கண்டு
களிக்கும் நாள் வரும் கலங்காதே இன்று.

No comments:

Post a Comment